Categories Post
அனந்தியா?.... நான் கருத்திலேயே எடுக்க மாட்டேன்.கூறுகிறார் சுமந்திரன் எம்பி.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ள நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அத்துடன், சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை வரைவை மேலும் காத்திரமானதாக்கி நிறைவேற்ற செய்ய வேண்டியதே எமக்குள்ள தற்போதைய கடமை. - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெனீவாவுக்கு சென்றிருந்த வட மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன், அங்கு வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தன்னை சுதந்திரமாக கதைப்பதற்கு சுமந்திரன் அனுமதிக்கவில்லை என்றும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அவர் வலியுறுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பில் ஜெனிவாவிலிருந்து இன்று நாடு திரும்பியிருந்த சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:- அனந்தியின் கருத்துகள் தொடர்பில் பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை. அதுகுறித்து நான் அதிகம் பேசவும் விரும்பவில்லை. அவரின் கருத்தி அரசியல் சுயலாபத்துக்கானது. அமெரிக்கப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ள முக்கியமான தருணத்தில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ள அரசியல் சுயலாபக் கருத்து ஜெனீவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில் இத்தருணத்தில் நாம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். எமக்குள் வேற்றுமை கொள்ளக் கூடாது. இலங்கை தொடர்பான பிரேரணையை மேலும் காத்திரமாக்கி நிறைவேற்ற வைக்க வேண்டும். இதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். கடந்த மாதம் நடுப்பகுதியில் 3 நாட்கள் அனந்தி ஜெனீவாவில் இருந்தார். நானும் இருந்தேன். அப்போது ஜெனீவாவிலுள்ள பலநாட்டு இராஜதந்திரிகளுடன் நாம் பேச்சு நடத்தினோம். இந்தச் சந்திப்புகள் குறித்து அனந்தி நாடு திரும்பியவுடன் பத்திரிகைகளுக்கு செய்திகளையும் பேட்டிகளையும் வழங்கியிருந்தார். அப்போது தான் பல நாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து தமிழர் பிரச்சினைகளை எடுத்துக்கூறினார் எனத் தெரிவித்திருந்தார். அத்துடன், சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை என்றும் அவர் கூறியிருந்தார். இது பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தன. மேலும், கனடா, அமெரிக்க நாடுகளின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புகளில் சர்வதேச விசாரணை தேவை என்ற தொனியில் சுமந்திரன் எம்.பி. கருத்துக் கூறினார் என்றும் தான் கூறியவற்றை அப்படியே அந்த அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், ஜெனீவாவில் மிகவும் கடுமையாக பிரேரணை இம்முறை வருவது சந்தேகம் எனத் தான் உணர்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படியான கருத்துகளைத் தெரிவித்திருந்த அனந்தி தற்போது திடீரென அதற்கு முற்றிலும் முரணான கருத்துகளை கூறியிருக்கிறார். ஜெனீவாவில் பல நாட்டு அதிகாரிகள் சந்திப்பில் தன்னைச் சுமந்திரன் எம்.பி. சுதந்திரமாகப் பேச விடவில்லை என்றும் சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இது எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. முன்னர் அனந்தியின் பேட்டிகளை பிரசுரிந்த்திருந்த ஊடகங்கள் இப்போது அவர் மாறிக் கருத்துத் தெரிவிக்கும்போது, முன்னர் அப்படிக் கூறியிருந்தீர்களே, இப்போது ஏன் மாற்றிக் கூறுகிறீர்கள் என அவரிடம் எந்த கேள்வியையும் கேட்கவில்லை. இது எமக்கு கவலை தருகிறது - என்றார் சுமந்திரன். -
Posted by kesa
at 3:50 PM,
Add Comment
மேலும் படிக்க...
மக்களுக்கு தலைவணங்க நாம் தயார்...காலணி த்துவ வாதிகளுக்கோ, அவர்களது கைபொம்மைகளுக்கோ தலைசாய்க்க ஒருபோதும் தயாரில்லை
மக்களுக்கு தலைவணங்க நாம் தயார். எனினும் காலணி த்துவ வாதிகளுக்கோ, அவர்களது கைபொம்மைகளுக்கோ தலைசாய்க்க ஒருபோதும் தயாரில்லை. மக்களின் தீர்ப்பே, எமது நம்பிக்கை என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கம்பஹாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின்போது, தெரிவித்தார்.மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம், கம்பஹா நகர சபை மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பிற்பகல் ஆரம்பமாகியது. ஷமகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் வெற்றிகொள்வோம் எனும் தொனிப்பொருளில், அமைச்சர் பெசில் ராஜபக்ச, பிரதியமைச்சர் பண்டு பண்டாரநாயக ஆகியோர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கம்பஹா நகர மைதானத்தில் திரண்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, பெற்ற சுதந்திரத்தையும், சமாதானத்தையும் தாரை வார்த்து, காலணித்துவவாதிகளின் கைபொம்மைகளிடம் மண்டியிட, தான் தயாரில்லையென, தெரிவித்தார்.30 ஆண்டுகால யுத்தத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம். அந்த முடிவின் பயனே, இந்த நாட்டின் அபிவிருத்தியாகும். அந்த முடிவின் மற்றைய பயன் தான், 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஜெனீவா சென்று பதிலளிக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகள் பற்றி எங்களிடம் வினவுகின்றார்கள். நாங்கள் மனித உரிமைகளை மீறிவிட்டோமாம். மக்களுக்கு வாழ்வதற்கு வழியமைப்பதை விட, வேறு என்னதான் மனித உரிமை இவர்களுக்கு தேவை. வாழ்வது ஒரு மனித உரிமையாகும்.
வாழ்வதற்கு வழியமைத்துக்கொடுப்பது ஒரு மனித உரிமையாகும். அன்று நாம் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்தோம். தெஹிவளையில் குண்டு வைக்கின்றார்கள், மத்திய வங்கி மீது தாக்குதல் நடாத்துகின்றார்கள், கெபிதிகொல்லாவையில் குண்டு வைக்கும்போது, முஸ்லிம் மக்களுக்கு தொழுகையை கூட நிம்மதியாக தொழ முடியாத வகையில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் காத்தான்குடியில் படுகொலை செய்யப்படும்போது, பள்ளிவாசலுக்கு உள்ளும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்கள். ஸ்ரீமகாபோதி மீதும் தாக்குதல் நடாத்தினார்கள்.
மதகுருமார் உட்பட யாத்திரையில் சென்றவர்களை படுகொலை செய்யும்போதும், தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதல் நடாத்தும்போது, முழு நாட்டிலும் குண்டுகள் வெடித்து, மக்கள் அநியாயமாக கொலை செய்யப்படும்போது, என்றுமே கிராமங்களில் வெள்ளைகொடி தொங்க விடப்படும்போது, இவற்றை நிறுத்தியது, ஒரு மனித உரிமை மீறலா? இது எமக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. நான் இந்த சர்வதேச தலைவர்களை சந்தித்தபோது, இதனை கூறினேன்.
மிக தெளிவாக நான் அவர்களுக்கு பதிலளித்திருந்தேன். நாம் இந்த நாட்டில் ஒருபோதும் மனித உரிமைகளை மீறவில்லை. அவற்றை நாம் பாதுகாத்தோம். இன்று எதிர்க்கட்சியின் சிலர், வந்து இவற்றுக்கு தீனி போடுகின்றார்கள். இந்த நாட்டில் பிறந்தவர்கள், எங்களுக்கு எதிராகவே இன்று பல்வேறு கருத்துகளை பரப்பி வருகின்றார்கள். இந்த நாட்டு மக்களின் கருத்துகளை மூடி மறைக்க முடியாது என்ற காரணத்தினால், இங்கு வெற்றிபெற முடியாவிட்டால், வெளிநாடு சென்றேனும் வெற்றிபெற வேண்டிய நிலைப்பாட்டில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
நாங்கள் ஒன்றை தெளிவாக கூறியிருக்கின்Nறூம். இங்கிருந்து எம்மை வேறெங்கும் எடுத்துச்செல்ல முடியாது. மின்சார கதிரைக்கு எடுத்துச்செல்லவும் முடியாது, வேறு எங்கும் எம்மை எடுத்துச்செல்ல முடியாது. இந்நாட்டிலிருந்து எங்களை வெளியேற்றக்கூடிய ஒரேயொரு பகுதியினர், இந்நாட்டு மக்களாவர். இந்த நாட்டு மக்களே இதற்கான சரியான தீர்ப்பை வழங்க முடியும்.
மனித உரிமைகள் ஸ்தாபனத்திற்கு அதனை வழங்க முடியாது. அது உங்கள் கரங்களில் உள்ள ஓர் தீர்ப்பாகும். அது பிழையென்று கூறினால், அதற்கு நாம் தலைசாய்க்க தயார். மக்களுக்கு தலைவணங்க நாம் தயார். ஆனால், காலணித்துவ வாதிகளுக்கோ அவர்களின் கைபொம்மைகளுக்கோ நாம் ஒருபோதும் தயாரில்லையென்பதை, கூறுகின்றோம். இந்த நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் மீது எமக்கு முழு அளவிலான நம்பிக்கை இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்
Posted by kesa
at 3:02 PM,
Add Comment
மேலும் படிக்க...
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆவணங்களை செனல்4 வெளியிட்டுள்ளது....
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆவணங்களை பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் தற்போதைய ஆவணம் மிகவும் மோசமானது என செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் போராளிகளின் சடலங்கள் மீது இலங்கை இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான காட்சிகள் இந்த புதிய ஆவணப்படத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எப்போது இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்பது பற்றிய துல்லியமான தகவல்களை வெளியிட முடியாத போதிலும், இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற சமயத்தில் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி ஒன்றின் கமரா மூலம் இந்தக் காட்சிகளை படை வீரர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இராணுவப் படையினரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த காட்சிகள் போலியானவை அல்ல எனவும், இவை மெய்யானவை எனவும் முன்னணி ஆய்வாளர் டொக்டர் ரிச்சர்ட் செபார்ட் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் அமைப்பு ஒன்று இந்த ஆவணங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் ஒவ்வொரு கட்சியும் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளதாகவும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் இந்த ஆவணப்படம் வெளியானமை, இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: செனல்4

at 2:50 PM,
Add Comment
மேலும் படிக்க...
செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் போலியானது...
பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆவணப்படம் போலியானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவப் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பிலான புதிய ஆவணப்படமொன்றை பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளது.படையினர், கொல்லப்பட்ட பெண் போராளிகளின் சடலங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது குறித்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும், இந்த ஆவணப்படும் போலியானது எனவும், கணனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.செனல்4 ஊடகம், ஊடகத்துறையை இழிவுபடுத்தி வருவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான வகையில் குரோத உணர்வுடன் செனல்4 ஊடகம் செயற்பட்டு வருகின்றமை அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைக்கு எந்த வகையிலும் நன்மையை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளது.
Posted by kesa
at 2:44 PM,
Add Comment
மேலும் படிக்க...
கைதடியில் கறுப்பு சிவுப்புடன் பெண்கள் எழுச்சி!
சர்வதேச மகளிர் தினத்தை யாழ் கைதடி கிராமம்
எழுச்சியுடன் கொண்டாடியுள்ளது.
வளர்மதி சனசமூக நிலையத்தில் நடந்த இந்நிகழ்வில் கைதடி பெண்கள் யாவரும் கறுப்பும் சிவப்பும் கலந்த வணர்ண சாறிகள் அணிந்து எழில் மிகு அழகுடன் அந்த நிகழ்வில் காட்சி அளித்தனர்.
பார்ப்போரை கவரும் விதத்தில் கலை நிகழ்வுகளும் நடந்தன.
Posted by kesa
at 2:05 PM,
Add Comment
மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான புற்றுநோய் வைத்திய விடுதி இடம் மாற்றம்
யாழ் . போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான
புற்றுநோய் வைத்திய விடுதி ( 26 ஏ ) தெல்லிப்பழை ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது .
சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாகவே முதலில் ஆண்களுக்கான விடுதி எதிர்வரும் 14 , 15, 16 ஆம் திகதிகளில் இடமாற்றப்படவுள்ளது என்றும் இந்த மூன்று தினங்களும் விடுதியில் இடம்பெறும் அனைத்துச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் மீண்டும் வைத்திய சேவைகள் இடம்பெறும் .
பெண்களுக்கான விடுதி மறுஅறிவித்தல் வரை யாழ் . போதனா வைத்தியசாலையிலேயே இயங்கும் என்றும் யாழ் . போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் திருமதி பி . பசுபதிராஜா அறிவித்துள்ளார் .
யாழ் . போதனா வைத்தியசாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து புற்று நோய் வைத்திய விடுதிகளும் எதிர்வரும் காலங்களில் முற்றாக தெல்லிப்பழை ட்ரெயில் புற்று நோய் வைத்தியசாலைக்கு இடம் மாற்றுவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் .

at 6:37 AM,
Add Comment
மேலும் படிக்க...
குறிகட்டுவான்_ நயினாதீவு கடற்பாதை சேவை. தினமும் காலையில் நயினாதீவிலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை.
குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும் கடற்பாதையின் சேவைகளை தினமும்
காலையில் நயினாதீவிலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேச செயலர் மற்றும் இப் பிரதேச சபைத்தலைவர் ஆகியோர் தெரிவித்துள்ளனர் .
குறிகட்டுவானில் இருந்து தற்போது இடம்பெற்றுவரும் பாதைச் சேவை நயினாதீவு மக்களுக்கு பயனற்றதாகவுள்ளது எனவும் குறித்த சேவையை நயினாதீவில் இருந்து ஆரம்பிப்பதுடன் வியாபாரிகள் எடுத்துவரும் பொருட்களைப் பாதையில் கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் எனும் நயினாதீவு மக்கள் வேலைணைப் பிரதேச செயலரின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரியிடம் முன்வைத்திருந்தனர் .
இவ்விடயம் தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை நயினாதீவில் பொதுமக்களைச் சந்தித்த வேலணை பிரதேச செயலர் திருமதி . மஞ்சுளாதேவி சதீஷன் , பிரதேச சபைத் தலைவர் வே . சிவராசா ஆகியோர் இப் பாதைப் படகு தொடர்பான பிரச்சினைகைளக் கேட்டறிந்ததுடன் நயினாதீவில் இருந்து பாதைச்சேவை ஆரம்பிக்கவும் வியாபாரிகளின் பொருட்களை எடுத்துக்செல்லவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர் .
அத்துடன் பெரிய வாகனங்களை ஏற்றுவது பாதையின் பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லை என்பதால் ஒரு கியூப் கொண்ட நான்கு வாகனங்களை ஏற்றிச் செல்லவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர் .
இதேவேளை நயினாதீவு - குறிகட்டுவான் கடல் போக்குவரத்து தொடர்பாக படகு உரிமையாளர்கள் கடற்பாதைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் நடைபெறவுள்ளது . இக்கலந்துரையாடலில் போக்குவரத்துக்கான நேர அட்டவணைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளன .
யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் , வேலணை பிரதேச சபைத்தலைவர் எஸ் . சிவராஜா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் .

at 6:00 AM,
Add Comment
மேலும் படிக்க...
Subscribe to:
Comments (Atom)