யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆவணங்களை பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் தற்போதைய ஆவணம் மிகவும் மோசமானது என செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் போராளிகளின் சடலங்கள் மீது இலங்கை இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான காட்சிகள் இந்த புதிய ஆவணப்படத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எப்போது இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்பது பற்றிய துல்லியமான தகவல்களை வெளியிட முடியாத போதிலும், இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற சமயத்தில் இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி ஒன்றின் கமரா மூலம் இந்தக் காட்சிகளை படை வீரர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இராணுவப் படையினரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த காட்சிகள் போலியானவை அல்ல எனவும், இவை மெய்யானவை எனவும் முன்னணி ஆய்வாளர் டொக்டர் ரிச்சர்ட் செபார்ட் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் அமைப்பு ஒன்று இந்த ஆவணங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் ஒவ்வொரு கட்சியும் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளதாகவும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் இந்த ஆவணப்படம் வெளியானமை, இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: செனல்4
Categories Post
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆவணங்களை செனல்4 வெளியிட்டுள்ளது....
Posted by kesa
on Sunday, March 9, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆவணங்களை செனல்4 வெளியிட்டுள்ளது...."
Post a Comment