Latest Updates

Categories Post

குறி­கட்­டு­வான்_ நயி­னா­தீ­வு கடற்­பா­தை சேவை. தினமும் காலையில் நயி­னா­தீ­வி­லி­ருந்து ஆரம்பிக்க நட­வ­டிக்கை.

குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும் கடற்பாதையின் சேவைகளை தினமும்
காலையில் நயினாதீவிலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேச செயலர் மற்றும் இப் பிரதேச சபைத்தலைவர் ஆகியோர் தெரிவித்துள்ளனர் .

குறிகட்டுவானில் இருந்து தற்போது இடம்பெற்றுவரும் பாதைச் சேவை நயினாதீவு மக்களுக்கு பயனற்றதாகவுள்ளது எனவும் குறித்த சேவையை நயினாதீவில் இருந்து ஆரம்பிப்பதுடன் வியாபாரிகள் எடுத்துவரும் பொருட்களைப் பாதையில் கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் எனும் நயினாதீவு மக்கள் வேலைணைப் பிரதேச செயலரின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரியிடம் முன்வைத்திருந்தனர் .

இவ்விடயம் தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை நயினாதீவில் பொதுமக்களைச் சந்தித்த வேலணை பிரதேச செயலர் திருமதி . மஞ்சுளாதேவி சதீஷன் , பிரதேச சபைத் தலைவர் வே . சிவராசா ஆகியோர் இப் பாதைப் படகு தொடர்பான பிரச்சினைகைளக் கேட்டறிந்ததுடன் நயினாதீவில் இருந்து பாதைச்சேவை ஆரம்பிக்கவும் வியாபாரிகளின் பொருட்களை எடுத்துக்செல்லவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர் .

அத்துடன் பெரிய வாகனங்களை ஏற்றுவது பாதையின் பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லை என்பதால் ஒரு கியூப் கொண்ட நான்கு வாகனங்களை ஏற்றிச் செல்லவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர் .

இதேவேளை நயினாதீவு - குறிகட்டுவான் கடல் போக்குவரத்து தொடர்பாக படகு உரிமையாளர்கள் கடற்பாதைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் நடைபெறவுள்ளது . இக்கலந்துரையாடலில் போக்குவரத்துக்கான நேர அட்டவணைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளன .

யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் , வேலணை பிரதேச சபைத்தலைவர் எஸ் . சிவராஜா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் .

0 Response to "குறி­கட்­டு­வான்_ நயி­னா­தீ­வு கடற்­பா­தை சேவை. தினமும் காலையில் நயி­னா­தீ­வி­லி­ருந்து ஆரம்பிக்க நட­வ­டிக்கை."

Post a Comment