Latest Updates

Categories Post

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

பெரும் போகத்திற்கான நெல் கொள்வனவு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவிக்கின்றது.

இம்முறை 1,50,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் மு.டீ ஜயசிங்க கூறுகின்றார்.

தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின் நெல் கொள்வனவிற்கான அனைத்து வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

தேவைக்கேற்ப களஞ்சியசாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு ஏற்ப, நெல் கொள்வனவு செய்யப்படும் என சபையின் தலைவர் மு.டீ.ஜயசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.

இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

0 Response to "பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்"

Post a Comment