Latest Updates

Categories Post

நடு இரவில் மதில் பாய்ந்து வவுனியா சைவப்பிரகாச வித்தியாலயத்தில் காதலர் தினம் கொண்டாடிய 7x boys!


வவுனியாவின் பிரபல பெண்கள் பாடசாலைகளில் ஒன்றாகிய சைவப்பிரகாச பெண்கள் பாடசாலையில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் கடந்த திங்கள் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த திங்கள் கிழமை இரவு(17) சைவபிரகாச மகளிர் கல்லூரியின் மதில் ஏறி குதித்த இளைஞர்கள் பாடசாலையின் சுவர்களில் பெரியளவில் இதயம் கீறி காதல் தொடர்பான வசனங்களையும் சிலரது பெயர்களையும் எழுதியுள்ளனர்.

குறிப்பாக 10C வகுப்புக்குள் நுழைந்து அவ் இளைஞர்கள் அங்கு தமது பெயர்களையும் அப் பாடசாலைகயில் கற்கும் பெண் பிள்ளைகளின் பெயரையும் இணைத்து வெள்ளை வர்ணப்பூச்சினால் எழுதியுள்ளதுடன், 7x boys எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞர்களின் அட்டகாசத்தை கண்ட காவலாளி அவர்களை விரட்டிய போது அவர் விழுந்து காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இச் சம்பவம் பெண்கள் பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Response to "நடு இரவில் மதில் பாய்ந்து வவுனியா சைவப்பிரகாச வித்தியாலயத்தில் காதலர் தினம் கொண்டாடிய 7x boys!"

Post a Comment