Latest Updates

Categories Post

யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான புற்றுநோய் வைத்திய விடுதி இடம் மாற்றம்

யாழ் . போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான
புற்றுநோய் வைத்திய விடுதி ( 26 ஏ ) தெல்லிப்பழை ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்யப்படவுள்ளது .

சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாகவே முதலில் ஆண்களுக்கான விடுதி எதிர்வரும் 14 , 15, 16 ஆம் திகதிகளில் இடமாற்றப்படவுள்ளது என்றும் இந்த மூன்று தினங்களும் விடுதியில் இடம்பெறும் அனைத்துச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் மீண்டும் வைத்திய சேவைகள் இடம்பெறும் .

பெண்களுக்கான விடுதி மறுஅறிவித்தல் வரை யாழ் . போதனா வைத்தியசாலையிலேயே இயங்கும் என்றும் யாழ் . போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் திருமதி பி . பசுபதிராஜா அறிவித்துள்ளார் .

யாழ் . போதனா வைத்தியசாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து புற்று நோய் வைத்திய விடுதிகளும் எதிர்வரும் காலங்களில் முற்றாக தெல்லிப்பழை ட்ரெயில் புற்று நோய் வைத்தியசாலைக்கு இடம் மாற்றுவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார் .

0 Response to "யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது இயங்கிவரும் ஆண்களுக்கான புற்றுநோய் வைத்திய விடுதி இடம் மாற்றம்"

Post a Comment