மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பட்டதாரி ஒருவரது சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் மீட்கப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவற்துறையினர் சந்கேகம் வெளியிட்டுள்ளதுடன் கொலைக்குரிய சந்தேக நபரின் உருவம் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்த கட்டிடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி.கமராவில் பதிவாகியுள்ளது எனவும் எனவே குறித்த சந்தேக நபரை அடையாளம் காணும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 Response to "கோலாலம்பூர் நகரில் இலங்கையைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர் சடலமாக மீட்பு! "
Post a Comment