Latest Updates

Categories Post

சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது.

சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர் .

மாதம்பே மற்றும் முந்தல் பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மாதம்பே , ஜயரத்னகம பிரதேசத்தில் வசிக்கும் 7 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 74 வயதான அயல் வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்தச் சிறுமியின் தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் , சிறுமி தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார் .

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் குறித்த நபர் தன்னை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார் .

சிறுமியின் குற்றச்சாட்டின்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இதேவேளை 13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 26 வயதான நபரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர் .

மககும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார் .

சிறுமியின் வீட்டிற்கு குறித்த சந்தேகநபர் வந்து செல்லும் நிலையில் அவ்விடயம் தொடர்பில் பெற்றோர் சிறுமியை விசாரித்துள்ளனர் .

இதன்போது , தம் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு உள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார் .

பெற்றோர் வீட்டில் இல்லாதபோது தாம் கணவன் மனைவியாக வாழ்வதாக சிறுமி தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை அவதானித்த பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர் .

இதன்படி முந்தல் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர் .

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இரு சம்பவங்கள் குறித்த சந்கேநபர்கள் சிலாபம் மற்றும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் .

0 Response to "சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது. "

Post a Comment