ஊடக அறிக்கை!
எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும் என நாம் கூறிவரும் தீர்க்க தரிசனமான உண்மை மீண்டும்
உணர்த்தப்பட்டுள்ளது
எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும.; அதற்காக சர்வதேச நாடுகளை
பிரதானமாக நம்பி பயனில்லை. நாம் ஆரம்பத்தில் இருந்தே தீர்க்கதரிசனமாக கூறி வந்த உண்மை சரியென
மறுபடியும் ஒரு முறை உணர்த்தப்பட்டிருக்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்
அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்ää
அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்! என்பது போல்ää எமது மக்களின் அரசியலுரிமைப்
பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு.
நாம் சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பியிருக்க முடியாது. தேவையென்றால்ää பிரசவத்தின் போது ஒரு
மருத்துவிச்சியின் கடமையை ஆற்றுவது போல்ää சர்வதேச நாடுகள் முன்வந்தால் அதை வரவேற்கலாம்.
ஏனெனில்ää எமது மக்கள் சுமந்த வலிகளையும்ää வதைகளையும் நாம் மட்டுமே உணர்வோம்.
எனவேää எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்புணர்வு எமக்கு
மட்டுமே இருக்க முடியும்.
இதையே நாம் நீண்ட காலமாகää தொலை தூர நோக்கில்ää தீர்க்கதரிசனமாகக் கூறி வருகின்றோம்.
ஆனாலும்ää சர்வதேச நாடுகளின் துணையுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்றும்ää
உலக நாடுகள் எமது பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும்ää
உலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையின் பலத்தை காட்ட தமக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்றும்ää
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கிää தேர்தல் வாக்குறுதிகளாகக்
கூறி வந்திருக்கிறது.
ஆனாலும் இன்று நடந்து வரும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மாநாட்டின் மூலம்
எமது மக்களுக்கு எந்த விமோசனங்களும் கிடைக்கப் போவதில்லை என்றும்
தாம் நம்பியிருந்த உலக நாடுகள் கைகளை விரித்து எமது மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடித்து ஊடகங்களுக்கு செய்தி கொடுத்து வருகிறது.
நாம் ஏற்கனவே தீர்க்கதரிசனமாகக் கூறி வந்த உண்மைகளை ஏற்று நடந்திருந்தால் அடுத்தவர்களை
நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் என்ற எமது நடைமுறை சாத்திய வழிமுறைகளை
விரும்பியிருந்தால்ää
உலக நாடுகள் எமது மக்களை ஏமாற்றி விட்டதாக இன்று அழுது புலம்பிää நாடகம் ஆட வேண்டிய அவசியம் இங்கு
நடந்திருக்காது.
ஆகவே சர்வதேச நாடுகளையோ அன்றி சர்வதேச நாடுகளிடம் முறையிட்டு எமது மக்களின் எல்லாப்
பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வரும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பையோ இனி ஒரு போதும் நம்பப் போவதில்லை என்ற உண்மையை எமது மக்கள் மறுபடியும்
ஒரு முறை இன்று உணர்ந்து கொண்டுள்ளனர்.
சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்துவோம். வெறும் போலி வீர உணர்ச்சிகள் வேண்டாம் என்று
முடிவு செய்வோம் சாணக்கிய தந்திர மதிநுட்ப சிந்தனைகளால் மட்டுமே எமது அரசியலுரிமைகளை
வென்றெடுப்போம்
உலக நாடுகளிடம் முறையிட்டுää எமது மக்களுக்குத் தீர்வு பெற்றுத் தருவோம் என்ற போலி
வாக்குறுதிகளை இனியும் வழங்காமல்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மதிநுட்ப சிந்தனை வழி நின்றுää
செயற்பட முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்ää அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஊடக இணைப்பாளர்
Categories Post
Home » breaking news »
Srilanka1
» அடுத்தவர்களை நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் EPDPயின் ஊடக அறிக்கை!
அடுத்தவர்களை நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் EPDPயின் ஊடக அறிக்கை!
Posted by kesa
on Saturday, March 8, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "அடுத்தவர்களை நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் EPDPயின் ஊடக அறிக்கை!"
Post a Comment