Latest Updates

Categories Post

உடுவில் பகுதியில் முதியவரை துரத்தி துரத்தி வெட்டிய இனந்தெரியாத குழுவினர்.


உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர்
படுகாயமடைந்துள்ளார் .

அதே இடத்தைச் சேர்ந்த தவம் ( வயது 60 ) என்பவரே படுகாயமடைந்தவராவார் . நேற்றிரவு வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவினர் குறித்த நபரை துரத்தி துரத்தி வாளால் வெட்டினர் .

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .

0 Response to "உடுவில் பகுதியில் முதியவரை துரத்தி துரத்தி வெட்டிய இனந்தெரியாத குழுவினர்."

Post a Comment