Latest Updates

Categories Post

ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ஆபாச புத்தகம் படித்த எம்.பி. பெரும் பரபரப்பு.

ஸ்பெயின் நாட்டில் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் அதிபரின் பேச்சை கவனமுடன் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு எம்.பி மட்டும் நிர்வாண படங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றினை மிகுந்த ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்தார். அதை பாராளுமன்ற நடவடிக்கைகளை படம்பிடிக்கும் கேமராமேன் ஒருவர் பார்த்து உடனே படம் பிடித்துவிட்டார். அந்த புகைப்படங்களும் வீடியோவும், உடனடியாக டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைல் வெளிவந்ததால், ஸ்பெயின் பாராளுமன்றமே அதிர்ச்சி அடைந்தது.

ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ஆபாச படங்கள் அடங்கிய புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்த எம்.பியின் பெயர் Miguel Ángel Revilla என்பது தெரிய வந்துள்ளது. அவர் மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த புத்தகத்தின் பெயர் Intervíu என்ற ஸ்பானிஷ் மொழி மேகசின். இளம்பெண்களின் நிர்வாணப்படங்கள் மட்டுமே அடங்கிய இந்த புத்தகத்தைத்தான் அந்த எம்.பி. பார்த்துக்கொண்டிருந்தார்.

தற்போது அந்த எம்.பி. மீது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை பதவியை விட்டு நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

0 Response to "ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ஆபாச புத்தகம் படித்த எம்.பி. பெரும் பரபரப்பு."

Post a Comment