ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீடு வரும் 9ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ள நிலையில் தற்போது கோச்சடையான் க்ளைமாக்ஸ் பாடல் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் உயிர்நாடியே அந்த படத்தில் க்ளைமாக்ஸ் படத்தில் வரும் ரா ரா என்ற பாடல்தான். அதுபோலவே மிகவும் அபாரமான பாடல் ஒன்று கோச்சடையான் படத்தின் க்ளைமாக்ஸில் இடம்பெறுகிறதாம். இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உச்ச ஸ்தாயில் பாடி இருக்கின்றாராம். இந்த பாடலை கேட்டு ரஜினி மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டிற்கு தனது மகளுடன் சென்று பாராட்டு தெரிவித்துள்ளார். படம் வெளியானவுடன் இந்த பாடல் மிகவும் பரபரப்பாக பேசப்படும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்த படத்தில் மன்னன் படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தாலும் இன்னும் அந்த தேதி உறுதி செய்யப்படவில்லை. ரிலீஸ் தேதிய இயக்குனர் செளந்தர்யா, பாடல் வெளியீடு தினத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories Post
Home » breaking news »
cinema »
tamil cinema news
» கோச்சடையான் க்ளைமாக்ஸ் பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரஜினி பாராட்டு.
கோச்சடையான் க்ளைமாக்ஸ் பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரஜினி பாராட்டு.
Posted by kesa
on Tuesday, March 4, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "கோச்சடையான் க்ளைமாக்ஸ் பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரஜினி பாராட்டு."
Post a Comment