Latest Updates

Categories Post

30,000 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு. சைபீரிய விஞ்ஞானிகள் சாதனை

சைபீரியா நாட்டு விஞ்ஞானிகள் குழு ஒன்று 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் ஒன்று உறைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்து சாதனை புரிந்திருக்கின்றனர். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களிலேயே இதுதான் மிகவும் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சைபீரிய நாட்டின் National Centre of Scientific Research என்ற ஆராய்ச்சி நிறுவனத்தினர் Professor Jean-Michel Claverie தலைமையில் சைபீரியாவின் பல பகுதிகள் 100 அடிக்கும் கீழே தோண்டி பலவித ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். அவ்வாறு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கையில் கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு உறைந்தி நிலையில் உள்ள வைரஸ்கள் கிடைத்தது. இந்த வைரஸ்களை மைக்ரோஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும்.

 pithovirus sibericum என்ற வைரஸ் வகையை சார்ந்த இந்த வைரஸ், சுமார் 30,000 வருடங்களுக்கு முன்பு பூமியில் இருந்தது என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் பழமை வாய்ந்தது ஆகும். இந்த வகை வைரஸ்களினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றாலும் இந்த வகையான வைரஸ்களை பூமியில் இருந்து தோண்டி எடுக்க வேண்டாம் என National Centre of Scientific Research நிறுவனத்தின் உதவித்தலைவர் Dr Chantal Abergel கருத்து தெரிவித்துள்ளார்.

0 Response to "30,000 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு. சைபீரிய விஞ்ஞானிகள் சாதனை"

Post a Comment