கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ( 02 ) இரவுஇடம்பெற்ற வாகன விபத்தில் கோணாவில் , காந்தி கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை நெல்சன்குமார் ( வயது 22 ) என்பவர் மரணமடைந்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர் .
ஒழுங்கையிலிருந்து வந்துகொண்டிருந்த உழவு இயந்திரம் வீதிக்குச் செல்ல முற்பட்டபோது , மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர் .
படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர் .
சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .
இதேவேளை உழவு இயந்திரச் சாரதியை கைதுசெய்ததுடன் , உழவு இயந்திரத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் கூறினர் .
வன்னி நிருபர் .
0 Response to "கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வாகன விபத்து. ஒருவர் உயிரிழப்பு."
Post a Comment