Latest Updates

Categories Post

மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்..

எதிர்வரும் 13 ம் திகதி கொழும்பில் மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம்
பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது .

எனவே அதற்கு முன்னர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் .

இரு நாட்டு மீனவர்களுடைய பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது .

இப் பேச்சுவாத்தையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தமிழக மீனவர்கள் 121 பேரையும் விடுதலை செய்யப்படவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார் .

இவர்கள் 121 பேரும் சென்னைப் பேச்சுவார்தைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
சுற்று

0 Response to "மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்.."

Post a Comment