Latest Updates

Categories Post

பழைய தண்டவாளங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பழைய தண்டவாளங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு
செல்வதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் இருவரை ஞாயிற்றுக்கிழமை ( 02 ) இரவு கைதுசெய்ததாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர் .

யாழ் . தெல்லிப்பளை பகுதியில் புகையிரதப்பாதை தற்போது புனரமைக்கப்படுகின்றது . இந்நிலையில் , அங்கு அகற்றப்பட்ட பழைய தண்டவாளங்களை இவர்கள் இருவரும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவர்களை கைதுசெய்ததுடன் , குறித்த வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் கூறினர்

0 Response to "பழைய தண்டவாளங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது."

Post a Comment