யாழ் . கோண்டாவில் மேற்கு உப்புமடப் பிள்ளையார் கோவிலடியில் ஞாயிற்றுக்கிழமை
( 02 ) மாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர் .
தாவடியைச்சேர்ந்த சு . வித்தியாதரன் ( 26 ) , மா . பகிரதன் ( 22 ) , சி . சஞ்சீவன் ( 20 ) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர் . இவர்களில் மேலும் ஒருவரின் விபரங்களை பெற்றுகொள்ள முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர் .
யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் நோக்கி மிதவேகத்தில் சென்றுகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் கொழுவுப்பட்டு எதிரே வந்த மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது .
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இதேவேளை , வடமாகாணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலும் இடம்பெற்ற விபத்துக்களில் 22359 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் அதிகமானவர்கள் மோட்டார் சைக்கிள் பயணிகள் என யாழ் . போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த டி சில்வா கடந்த வெள்ளிக்கிழமை யாழ் . பொதுநூலகத்தில் இடம்பெற்ற விபத்துக்களை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலில் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது .
Categories Post
கோண்டாவில் பகுதியில் விபத்து நால்வர் படுகாயம். [படங்கள் இணைப்பு]
Posted by kesa
on Monday, March 3, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "கோண்டாவில் பகுதியில் விபத்து நால்வர் படுகாயம். [படங்கள் இணைப்பு]"
Post a Comment