Latest Updates

Categories Post

அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத் தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத் தரப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைகலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் இன்றைய தினம் (03) இடம்பெற்ற யாழ்.தூரசேவை பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. அந்தவகையில், மக்களுக்கான சேவைகளை ஆற்றும் முக்கியபணியை நீங்கள் ஆற்றிவருகின்றீர்கள்.

இந்நிலையில், சங்கத்தின் தேவைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நீங்கள் பல்வேறுபட்ட தடைகளை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு உள்ளாகலாம்; அவ்வாறு நியாயமான உங்களது கோரிக்கைகளுக்கும் தேவைகளுக்கும் உரிய வகையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் எப்போதுமே தயாராகவிருக்கின்றோம்.

தமது சுயலாப அரசியலுக்காக சிலர் இவ்வாறான தடைகளை போட்டு மக்களை குழப்பி வருகின்றார்கள். இந்நிலையில் நீங்கள் உண்மையை தெரிந்து கொண்டு சரியானதும், உண்மையானதுமான வழியில் பயணிக்க வேண்டும்.

அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு நாம் எப்போதுமே தயாராகவே இருக்கின்றோம். அந்தவகையில், நியாயமான உங்களது செயற்பாடுகளுக்கு எனது முழுமையான பங்களிப்பும் ஒத்துழைப்பும் வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.

யாழ்.தூர சேவை பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர், பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பிறைவேட் லிமிட்டெட் முகாமையாளர் ஆனந்தராசா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.




0 Response to "அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுத் தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"

Post a Comment