Latest Updates

Categories Post

குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரேரணை குறித்தும் கவலை இல்லை!– ஜனாதிபதி



அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் அது குறித்த வாக்கெடுப்பு தொடர்பில் தாம் கவலை கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரடிய செவ்வி ஒன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும்,  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதியவை இல்லை.

இவை யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் இருந்தே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதனை தாம் பெரிதுப்படுத்துவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் எவையும் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கையை எதுவும் அமெரிக்காவினால் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டை இல்லாதொழிப்பதற்கு பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக்க் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வரும் தரப்பினருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தாய் நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும், அச்சுறுத்தலையும் எதிர்நோக்க அரசாங்கம் ஆயத்த நிலையில் இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 Response to "குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரேரணை குறித்தும் கவலை இல்லை!– ஜனாதிபதி"

Post a Comment