பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் தேசிய வடிவமைப்புச் சபை ஆகியவற்றின் இவ்வருட செயற்திட்டங்கள் மற்றும் கண்காட்சிகளின் ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது இவ்வருடம் நடாத்தப்படவுள்ள சில்ப தேசிய கண்காட்சி மற்றும் யுகத்தின் தயாரிப்பு வடிவமைப்புக்களின் கண்காட்சி தொடர்பில் விசேட அவதானஞ் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, ஆலோசகர் திருமதி ஜெகராசசிங்கம், மேலதிக செயலாளர் மங்கலிக்கா அதிகாரி, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்திகீர்த்திசேன, தேசிய வடிவமைப்புச் சபையின் தலைவர் மாஷல் ஜனத்தா உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்;டனர்.
0 Response to "இவ்வருட திட்டங்கள் நடைமுறை குறித்து அமைச்சில் கலந்துரையாடல்"
Post a Comment