Latest Updates

Categories Post

யாழ் மாவட்ட ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் வன்னி மாவட்டத்திற்கு இடமாற்றம்.



வடமாகாண கல்வித் தினைக்களத்தினால் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும்
ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் வன்னி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன .

கடந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களில் ஒரு தொகுதியினர் இரண்டு வருடகாலம் வன்னியில் சேவையாற்ற வேண்டும் என்ற மாகாண அமைச்சின் நிபந்தனையின் அடிப்படையில் குறிப்பிட்ட அசிரியர்கள் தமது இரண்டு வருடகால சேவை நிறைவுற்ற நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதினால் புதியவர்களை அந்த இடங்களுக்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக வட மாகாண கல்வித்தினைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

இதே வேளை பலாலி கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகளில் தமது பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறவுள்ள ஆசிரியர்களும் வன்னி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும் .

0 Response to "யாழ் மாவட்ட ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் வன்னி மாவட்டத்திற்கு இடமாற்றம்."

Post a Comment