Latest Updates

Categories Post

வடமாகாண சபைக்குச் சொந்தமான பஸ் பளையில் விபத்துக்குள்ளானது. பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 32 பேர் காயம்.


யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற பஸ்விபத்தில்
பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர் .

யாழ்ப்பாணத்திலிருந்து மாங்குளம் , துணுக்காய் நோக்கி பாடசாலை ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வடமாகாண சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது .

பளை பகுதியில் மஞ்சட்கடவையில் மாணவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த பஸ் வண்டி கட்டுப்பாட்டை மீறி அருகிலுள்ள கடையில் மோதுண்டுள்ளது .

இதன்போது வீதியை கடக்க முயற்சித்த பளை மகா வித்தியாலய மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் வீதிக்கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளனர் .

அத்துடன் பஸ்ஸில் பயணம் செய்த 27 ஆசிரியர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .

காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையிலும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . படுகாயமடைந்த மாணவர் ஒருவர் பளை வைத்தியசாலையிலிருந்து உடனடியாக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் மாணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார் .

0 Response to "வடமாகாண சபைக்குச் சொந்தமான பஸ் பளையில் விபத்துக்குள்ளானது. பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 32 பேர் காயம்."

Post a Comment