Latest Updates

Categories Post

இங்­கி­லாந்தில் கல்வி வாய்ப்­பினை பெற்றுத் தரு­வ­தாகக் கூறி மோசடி செய்த நபர் கைது.

இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி ரூபா 80 இலட்சம் மோசடி
செய்து 9 வருடங்களாக தலைமறைவாகியிருந்த நபர் ஒருவரை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர் .

9 வருடங்களாக குரித்த நபர் வெளி நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் குறித்த நபர் இலங்கைக்கு மீன்டும் வந்துள்ளதுடன் அப்போதே அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார் .

கொழும்பு , பம்பலப்பிட்டியில் ' ஜி.டி. இன்டர்நெஷனல் ' என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்த அப்துல் அசாக் மொஹமட் ரிமாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார் . கண்டி மாவில்மட பகுதியைச் சேர்ந்த இந்த நபர் இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி 2005 ஆம் ஆண்டுவரை பலரிடம் பணமோசடி செய்துள்ளார் . சந்தேக நபர் தொடர்பில் 23 முறைப்பாடுகள் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு 7 கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன 2005 ஆம் ஆண்டு குறித்த நபர் வெளி நாடொன்ருக்கு தப்பிச் சென்று அங்கு 9 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்தார் . அதன்பின்னர் சந்தேக நபர் இவ்வாரம் தாய்நாட்டுக்குத் திரும்பியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது . இதனையடுத்து விரைவாக செயற்பட்ட மோசடி தடுப்புப் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

ஜி.டி. இன்டர்நெஷனல் என்ற பெயரில் இயங்கிய நிறுவனத்தாரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் 071 8602585 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

0 Response to "இங்­கி­லாந்தில் கல்வி வாய்ப்­பினை பெற்றுத் தரு­வ­தாகக் கூறி மோசடி செய்த நபர் கைது."

Post a Comment