Latest Updates

Categories Post

நாவி­தன்­வெளி கல்­விக்­கோட்­டத்தின் 16 பாட­சா­லை­களில் நடனம், சங்­கீத பாடங்­க­ளுக்­கு கடந்த 23 வரு­டங்­க­ளாக ஆசிரியர்கள் இல்லை.

அம்பாறை நாவிதன்வெளி கல்விக்கோட்டத்தின் கீழ் உள்ள 16 பாடசாலைகளின்
நடனம் , சங்கீதம் பாடங்களுக்கான ஆசிரியர்கள் கடந்த 23 வருடங்களாக நியமிக்கப்படவில்லை . இதனால் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் கல்விக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அபிவிருத்திகள் மற்றும் கல்வியில் தொடர்ந்து திட்டமிட்ட புறக்கணிப்பே இடம்பெற்று வருவதாக ஓய்வு பெற்ற நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ . விநாயகம்பிள்ளை தெரிவித்தார் .

அம்பாறை மாவட்ட தமிழர் வாழ் உரிமை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதியமைச்சர் சரத் வீரசேகரவை புத்திஜீவிகள் சந்திக்கும் நிகழ்வு அம்பாறை ஆரியவான் உல்லாச விடுதியில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற நாவிதன்வெளி கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ . விநாயகம்பிள்ளை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் தொடர்ந்து பேசுகையில் ,

சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழ் உள்ள நாவிதன்வெளி கல்விக் கோட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளையும் 6 முஸ்லிம் பாடசாலையுமாக 22 பாடசாலைகளிலும் 562 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருவதுடன் 4,800 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் . இருந்தபோதிலும் இதில் தமிழ் பாடசாலைகளான 16 பாடசாலைகளில் கடந்த 23 வருடகாலமாக சங்கீத , நடன ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை .

அழகியல் பாடத்தின் கீழ் நடனம் , சங்கீதம் , சித்திரம் போன்ற பாடங்களில் மாணவர்கள் விரும்பியதை கற்க முடியும் . அவ்வாறான நிலையில் சங்கீத , நடன ஆசிரியர்கள் 23 வருடங்களாக நியமிக்கப்படாததால் மாணவர்கள் அந்த இரு பாடங்களையும் கற்கமுடியாத நிலையையடுத்து சித்திர பாடத்தை கட்டாயம் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . இதனையடுத்து இப்பிரதேசத்துக்கான பாடசாலைகளுக்கு நடன , சங்கீத பாடங்களை மாணவர்கள் கற்பதில்லை என்றும் இப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவை ஏற்படவில்லை என திட்டமிட்டு தமிழ்மக்களின் கலாசாரம் அழிக்கப்பட்டு வருகின்றது .

இவ்வாறான செயற்பாடுகள் இன்று பாடசாலையில் ஒருகலை நிகழ்ச்சியோ அல்லது மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட கலாசார போட்டியில் இக் கல்விக்கோட்டத்தில் பங்கு கொள்ளமுடியாத நிலையை தோற்றுவித்ததுடன் மாணவர்களின் அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்டுள்ளது .

அதேவேளை , சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஏனைய கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கு தனியான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகின்றது . ஆனால் , நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகம் பாடசாலை ஒன்றில் உள்ள சிறிய அறையில் மின்சாரம் மற்றும் தளபாட ஆளணிகள் இன்றி பல்வேறு சிரமத்தின் மத்தியில் இயங்கி வருவதுடன் கடந்த கால யுத்தத்தினால் பல பாடசாலைகள் பாதிக்கப்பட்ட போதும் அவைகள் எந்தவிதமான அபிவிருத்திகள் இன்றிய நிலையிலேயே உள்ளதுடன் தமிழ் மக்களின் கல்வியிலும் திட்டமிட்ட செயற் பாட்டையே காணக்கூடியதாக உள்ளது .

எனவே , தமிழ்மக்களின் கல்வி உரிமையான நடன , சங்கீத ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார் .

0 Response to "நாவி­தன்­வெளி கல்­விக்­கோட்­டத்தின் 16 பாட­சா­லை­களில் நடனம், சங்­கீத பாடங்­க­ளுக்­கு கடந்த 23 வரு­டங்­க­ளாக ஆசிரியர்கள் இல்லை."

Post a Comment