Latest Updates

Categories Post

பஸ் விபத்தில் சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில்
சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

தங்காளை பகுதியிலிருந்து யாழ்பாணத்திற்கு சுற்றுலாவுக்காக மாணவர்களை ஏற்றி சென்ற இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்ஸொன்று சாவகச்சேரியிலிருந்து யாழ் . நோக்கி சென்றுகொண்டிருந்த கன்டர் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்விபத்தில் கண்டர் ரக வாகனத்தை செலுத்தி சென்ற சாரதியே காயமடைந்ததாகவும் மாணவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்ததுடன் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

0 Response to "பஸ் விபத்தில் சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி"

Post a Comment