Latest Updates

Categories Post

ஜெனீவாவில் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இன்று உரையாற்றுகிறார்!


ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று (05) உரையாற்றுவார்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமற்றவையென சாட்சியங்களுடன் தனது 20 நிமிட உரை மூலம் நிரூபித்துக்காட்டவுள்ளார்.

அமைச்சர் பீரிஸ்,நாளை வியாழக்கிழமை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் இலங்கை தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோடியாக ஆணைக் குழுவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை விவகாரம் தொடர்பில் ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகளினதும் முக்கிய பிரதிநிதிகளை அமைச்சர் பீரிஸ் சந்தித்து இலங்கையின் கள நிலைவரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.

இதேவேளை ஜெனீவாவில் முன்னெடுக்கப்படவுள்ள 130வது உள் ளக பாராளுமன்ற ஒன்றியம், பொதுச் சபை உள்ளிட்ட ஏனைய கூட்டங் களில் கலந்துகொள்ளும் முகமாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமை ச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் 09 ஆம் திகதியும் பாராளுமன்ற சபைத் தலைவரும் நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்வரும் 15 ஆம் திகதிய ன்றும் ஜெனீவாவிலுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து கொள்வர்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடர் மார்ச் 03 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசேட உரையுடன் ஆரம்பமானது. மார்ச் 28 ஆம் திகதி வரையில் தொடரவுள்ள இக் கூட்டத் தொடரில் இன்றும் நாளையும் அதன் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையிலான அமர்வுகள் நடைபெறும். இதன்போதே இலங்கை அரசாங்கம் சார்பில் அமைச்சர் பீரிஸ் உரை யாற்றவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை எம்பி சஜித் டி வாஸ் குணவர்தன, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ, இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சந்திம விக்கிரமசிங்க, அமைச்சின் மேற்கு நாடுகளுக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் பத்துமா மபூசா ஆகியோர் ஜெனீவா பேரவையின் உயர்மட்ட கூட்டத் தொடரில் ஆரம்பம் முதல் கலந்து கொண்டு கள நிலைகளை ஆராய்ந்து வருகின்றன

0 Response to "ஜெனீவாவில் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் இன்று உரையாற்றுகிறார்!"

Post a Comment