வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான
பற்றாக்குறை நிலவுவதாக பாடசாலைகளின் அதிபர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் இடம் பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றம் காரணமாக இத்தகைய ஆசிரியர்களின பற்றாக்குறை பாடசாலைகளில் ஏற்பட்டுள்ளதாக அதிபர்களினால் குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது சம்பந்தமாக வலிகாமம் கல்வி வலய கல்விப்பணிப்பாளர் சந்திரராசாவிடம் இது சம்பந்தமாக கேட்ட போது.
இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்னரே வலிகாமம் கல்வி வலயத்தில் அறுபத்தைந்து ஆசிரியர்களுக்கான பற்றாக் குறை காணப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு மேல் ஒரு பாடசாலையில் கடமையாற்றியவர்கள் என்ற வகையில் ஆசிரியர்களின் இடமாற்றம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இடமாற்றத்திற்கு முன்னர் குறிப்பிட்ட பாடசாலையில் இருந்த ஆசிரியர் ஒருவர் இடமாற்றத்திற்கு உள்ளாகிய போதிலும் அந்த இடத்திற்கு புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படாமையால் இத்தகைய பற்றாக்குறை என்ற நிலமை காணப்படுகின்றது.
வலிகாமம் கல்வி வலயத்தில் கணிதம்,தகவல் தொழில்நுட்பம்,சித்திரம்,ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இது சம்பந்தமாக வட மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Categories Post
வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை
Posted by kesa
on Saturday, March 1, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை"
Post a Comment