சிறுமியொறுவரை காட்டுப் பகுதிக்குள் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தியதாகச் சொல்லப்படும் 21 வயது இளைஞர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர் . கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் , அவர் நவகத்தேகம பிரதேசத்திலேயே சிகை அலங்காரம் செய்யும் கடை ஒன்றினை நடத்திவருபவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
நவகத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் நவகத்தேகம கிரிமெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தியே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் சிறுமியாவார் . பாடசாலை செல்லும் இச்சிறுமிக்கும் சந்தேக நபரான இளைஞருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது .
நேற்று முன்தினம் சிறுமி பாடசாலை செல்லும் வழியில் தனது முச்சக்கர வண்டியில் வந்துள்ள சந்தேக நபர் சிறுமியை முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்று அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் வைத்து இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
காட்டுப்பகுதிக்குள் பாடசாலைச் சிறுமி ஒருத்தி இளைஞன் ஒருவருடன் இருப்பதை அவதானித்த அவ்வழியால் சென்ற ஒருவர் இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார் .
இதனையடுத்து , உடன் ஸ்தலத்துக்கு விரைந்து நவகத்தேகம பொலிஸார் குறித்த பிரதேச பற்றைக்குள் வைத்தே சிறுமியையும் , சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர் .
சந்தேக நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் . இதனையடுத்து சிறுமியை வைத்தியப் பரிசோதனைக்காக நவகத்தேகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
Categories Post
பற்றைகளுக்குள் அரங்கேறும் இன்றைய உண்மை காதல்கள்
Posted by kesa
on Saturday, March 1, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "பற்றைகளுக்குள் அரங்கேறும் இன்றைய உண்மை காதல்கள்"
Post a Comment