தெஹிவளை , பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடவத்தை வீதியில் அமைந்துள்ள
பள்ளிவாசல் தொடர்பில் அது சட்டத்திற்கு புறம்பானது எனவும் பொதுமக்கள் குறித்த பள்ளிவாசல் அங்கு இருப்பதனால் பல்வேறு போக்குவரத்து அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் , பள்ளிவாசல் தொடர்பில் 10 பேர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக குற்றம் முன்வைக்கப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் ஏற்கனவே பதிவாகியது .
குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை பல்வேறு வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சுமார் இரண்டு மணி நேரம் வரை வழக்கானது நீடித்திருந்தது . பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வக்பு சட்டத்தின் கீழ் பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டதுடன் சுற்று நிரூபத்தை விட சட்டத்துக்கு வலிமை அதிகம் என பள்ளிவாசல் தொடர்பில் வாதிட்ட சட்டத்தரனிகள் இன்று தெரிவித்திருந்தார்கள் .
இதேவேளை வழக்கு தொடர்பில் நீதிமன்றநீதிபதி , போக்குவரத்து நெரிசல்களுக்காக பள்ளிவாசலை மூட முடியாது என தெரிவித்தார் , அவ்வாறு போக்குவரத்து நெரிசல் காணப்படுமிடத்து போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி அதனை சரி செய்துகொள்ளுமாறு பொலிஸார்க்கு அறிவுறுத்தினார் .
எனினும் வழக்கின் குறுக்கு விசாரனைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் , இன்றையவிசாரனையை தொடர்ந்தே கடவத்தை வீதி பள்ளிவாசலில் விதிக்கப்பட்டிருக்கும் தொழுகைக்கு தடையை நீக்குவதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படவுள்ளது .
Categories Post
தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம். தொழுகைத் தடை நீங்குமா?
Posted by kesa
on Thursday, March 6, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம். தொழுகைத் தடை நீங்குமா?"
Post a Comment