Latest Updates

Categories Post

கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அடுத்த கூட்டமைப்பின் தலைவராக சாம் கருதிக் கொண்டிருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் முறுகல் நிலை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த மாதம் புலிகளின் திருமலை அரசியல் துறைப் பொறுப்பார் எழிலனின் மனைவி அனந்தியை ஜெனீவா அழைத்துச் சென்ற கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன், அனந்தியை வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் கதைக்க அனுமதிக்கவில்லை. அது சரி விட்டா கதைக்க இங்கிலீசு தெரியணுமல்ல.

அவரும் கதைக்கவில்லை என அனந்தி இன்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். மன்னிக்கவும் பத்திரிகையாளரை கூப்பிட்டு சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கூட்டமைப்பின் செல்லப்பிள்ளை அனந்தியை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். உண்மையை போட்டுடைத்துட்டாள் என ஆவேசம் அடைந்துள்ளார்.

ஆரம்பிச்சுட்டு மோதல்.. ஜெகிக்கபோவது வாக்குகள் பெற்ற அனந்தியா? தேசியப்பட்டியல் சுமந்திரனா..

0 Response to " கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம்"

Post a Comment