Latest Updates

Categories Post

சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ய முயற்­சித்த 53 வய­து­ நபருக்கு விளக்­க­ம­றி­யல்

கல்முனை - பெரியநீலாவணை பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய
முயற்சித்த 53 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி யுட்சன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உத்தரவிட்டார்

பெரிய நீலாவணை பிரதேசத்தில் குறித்த சிறுமி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற அதே வீதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் அருகில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றிற்குள் சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தபோது சிறுமி சத்தமிட்டதையடுத்து குறித்த நபர் தப்பியோடியுள்ளார்

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவரை கைது செய்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தர விட்டார் .

0 Response to "சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்ய முயற்­சித்த 53 வய­து­ நபருக்கு விளக்­க­ம­றி­யல்"

Post a Comment