யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா தோனிக்கல்லைச் சேர்ந்த கணேஸ் லெவின் றுக்சன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது...
இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புகையிரத புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றில் வவுனியாவைச் சேர்ந்த குறித்த இளைஞர் யாழில் தங்கியிருந்து வேலை செய்து வந்திருந்தார்.
நாவலர் வீதியலுள்ள மேற்படி நிறுவனத்தில் வேலை செய்த மேற்படி இளைஞர் அதற்கு முன்னாலுள்ள வீடொன்றிலேயே தங்கி வந்திருந்தார். இவருடன் மேலும் சில இளைஞர்களும் அந்த வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த வீட்டில் வைத்து மேற்குறித்த இளைஞர் மது அருந்தியதாகவும் இதனைத் தொடர்ந்து தங்களைத் தாக்கியதாகவும் வீட்டில் அட்டகாசம் புரிந்ததாகவும் அங்கு தங்கியிருந்த ஏனையவர்கள் தெரிவித்து ள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டினைத் தீமுட்டியதாகவும் இதனை தாங்களே அனைத்ததாகவும் தெரிவித்துள்ள அங்கிருந்த ஏனையவர்கள் மது போதையில் நின்றிருந்த இளைஞரை தாம் பாதுகாப்பாக கொண்டு சென்றதாகவும் இதன் பின்னர் இன்று அதிகாலை வேiளியலையே அவர் தூங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை அந்த விட்டில் தூங்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமொன்றிருப்பது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இச்சதம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கnhண்டு வருகின்றனர்.
Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய இளைஞன் - அதிர்ச்சிக் காட்சிகள் (Video)
யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய இளைஞன் - அதிர்ச்சிக் காட்சிகள் (Video)
Posted by kesa
on Wednesday, February 26, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய இளைஞன் - அதிர்ச்சிக் காட்சிகள் (Video)"
Post a Comment