Latest Updates

Categories Post

மியான்மர் மாநாட்டில் ராஜபக்சேவை சந்திக்கிறார் மன்மோகன்சிங்

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு அடுத்த வாரம் மியான்மரில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்திக்கவுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து நிருபர்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த அவர், அடுத்த மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானம் மீதான மாநாடு நடைபெற உள்ள நிலையில், இலங்கை மீதான சர்வதேச நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று கூறினார்.

மேலும் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவர், தீர்மானத்தை முழுமையாக படித்து ஆய்வுசெய்த பிறகே அதுபற்றி முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

ராஜபக்சேவுடனான பிரதமரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0 Response to "மியான்மர் மாநாட்டில் ராஜபக்சேவை சந்திக்கிறார் மன்மோகன்சிங்"

Post a Comment