Latest Updates

Categories Post

நெதர்லாந்தில், கல்வியில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த ஈழத்துச் சிறுவன்!

நெதர்லாந்தில் ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் தரம்  8இல் அதிக புள்ளிகளை பெறும் இரு மாணவர்களுக்கிடையே உயர் பரீட்சைக்கு தேர்வாவது ஓர் வழமையான விடையம்.

அதனடிப்படையில், தரம் 8 இல் கல்வி பயிலும் ஈழத்துச் சிறுவனான ஜெரிக் ஜெஸ்லின் சந்திரகுமார் என்பவர் அனைத்துப் பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்று அந்த நாட்டின் உயர் பரீட்சைக்கு தேர்வாகியுள்ளார்.

தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்கள் கல்வியில் அதீக ஈடுபாடுள்ளவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள ஈழத்துச் சிறுவனான ஜெரிக் அவரின் பெற்றொருக்கு மட்டுமன்றி தாய் நாட்டிற்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதியன்று நெதர்லாந்தில் நடைபெறவுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்குமிடையிலான உயர் பரீட்சையில் தோற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக கல்வியில் சாதனை படைத்திருக்கும் இவருக்கும்,  பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் இவரது கல்விக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கிய பெற்றொருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

0 Response to " நெதர்லாந்தில், கல்வியில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த ஈழத்துச் சிறுவன்!"

Post a Comment