Latest Updates

Categories Post

தேசத்தின் மகுடத்தில் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் நடனம்

தேசத்தின் மகுடத்தில்  பெண்கள் போட்ட ஆட்டம்!

குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற தேசத்தின்
மகுடம் கண்காட்சியில் இரண்டாம் நாள் நிகழ்வான நேற்று சிறப்பு அரங்காற்றுகையாக தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் நடனம் அமைந்தது.

இம்முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று, சிவில் பாதுகாப்பு படையில் கடமை
ஆற்றுகின்றார்கள். ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவும், கிளிநொச்சி -
முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு பிரிவும் இணைந்து தேசத்தின் மகுடம் கண்காட்சியில்
இவர்களின் அரங்காற்றுகைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து உள்ளனர்.

புனர்வாழ்வு பெற்ற பெண் புலிகள் சினிமா பாடலுக்கு மேடையில் போட்ட ஆட்டம் பார்வையாளர்களை
ஆட்டம் போட வைத்தது.

கலர் கலராக பாவாடை, சட்டை அணிந்து மேடைக்கு வந்தனர். ஆட்டத்தில் மிகுந்த தேர்ச்சி
பெற்றவர்கள் போல் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.





0 Response to "தேசத்தின் மகுடத்தில் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் நடனம்"

Post a Comment