Latest Updates

Categories Post

ஜனாதிபதி மஹிந்தவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கின்ற வைபவத்தில் குண்டு வைக்கப்பட உள்ளதாக வந்த மிரட்டல்
கடிதம் குறித்து புத்தளம் பொலிஸார் புலனாய்வுகளை முடுக்கி விட்டு உள்ளனர்.

புத்தளம் சாஹிரா கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்து வைக்க ஜனாதிபதி இன்று செல்கின்றார்.

இந்நிலையில் புத்தளம் பொலிஸ் தலைமையகத்துக்கு தமிழில் நேற்று முன் தினம் மிரட்டல் கடிதம்
வந்தது.

மதுரங்குளியவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் தமிழ் மாணவனே இக்கடிதத்தை எழுதி உள்ளார்
என்று புலனாய்வு விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இவர் குறித்த பாடசாலையின்
தலைமை மாணவ தலைவர் ஆவார். மற்ற மூன்று மாணவர்கள் சேர்ந்து கடிதத்தை எழுதுவித்து உள்ளார்கள்.

முஸ்லிம் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவன் தலைமை மாணவ தலைவராக இருக்கின்றமையை விரும்பாத
சில மாணவர்கள் மாட்டி விட பார்த்தனர் என்றும் தமிழ் மாணவன் நிரபராதி என்றும் மூன்று
மாணவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றும் தெரிகின்றது.

0 Response to " ஜனாதிபதி மஹிந்தவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!"

Post a Comment