வலி . தென்மேற்கு பிரதேச சபையிலுள்ள உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்தபெறுமதியான மின்கலம் காணாமல்போயுள்ளது . இதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு அறவிடப்பட வேண்டும் என இச் சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் .
வலி . தென்மேற்கு பிரதேசத்தில் திண்மக்கழிவுகள் அகற்றல் , குடிநீர் விநியோகம் போன்ற தேவைகளுக்காக வழங்கப்பட்ட உழவு இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டமையி னால் மானிப்பாய் பட்டின உப அலுவலகத்திற் குப் பின்பக்கமான வாகனங்கள் தரிக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரத்திற்கு மின்கலம் தேவைப்பட்டமையினால் குறி த்த உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்கலத்தை மாற்ற முற்பட்டபோது மின்கலம் காணாமல்போன விடயம் தெரிய வந்துள்ளது .
இச் சபை மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இது தொடர்பாக தவிசாளர் தெரிவித்தபோது சீற்றமடைந்த உறுப்பினர்கள் இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அதற்குரிய நஷ்டஈ ட்டை அறவிடவேண்டும் எனவும் தெரி வித்துள்ளனர் .
இதேவேளை குறித்த உப அலுவ லகத்திற்குப் பின்பக்கமாக வைக்கப் பட்டிருந்த பயன்படுத்தப்படாத நிலை யிலிருந்த மேடைத்தராசும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமாய் மறைந் தமை குறிப்பிடத்தக்கது .
0 Response to "உழவு இயந்திரத்தில் இருந்த மின்கலம் மாயம் வலி. தென்மேற்கு பிரதேச சபையில் சம்பவம்."
Post a Comment