
இன்று(15-02-2014) ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த உற்சவ ஆலோசணை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
வருடந்தோறும் சிறப்பாக இடம்பெறுகின்ற ஆலய உறசவம் இவ் வருடம் எதிர்வரும் வரும் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி 17 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. கடந்த வருட உற்சவம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது இதற்காக திணைக்களங்கள் முதல் அனைவரும் தங்களின் சிறப்பான பாராட்டத்தக்கவகையில் ஒத்துழைப்பினை வழங்கினார்கள் அதே போன்று இவ்வருட உற்சவத்திற்கு வழங்கவேண்டும் இவ்வருடமும் பெருமளவு பக்கத்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் எனவே வருகின்ற பக்கதர்கள் சிரமமின்றி ஆலய உற்சவத்தில் பங்குகொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பு எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
இவ்வருட உற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் ஆலய பரிபாலனசபை மற்றும் வருகை தந்திருந்த திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒவ்வொருவரும் மேற்கொள்ள கொள்ள வேண்டிய பணிகளும் பிரித்து வழங்கப்பட்டது.
அந்த வகையில் வீதி செப்பணிடல்ääபோக்குவரத்துääகுடிநீர்ääசுகாதாரம்ääபாதுகாப்புää ஆலய சூழல் துப்பரவு செய்தல்ää வாகன பாதுகாப்புää வியாபார நடவடிக்கைகள்ää கழிவகற்றல்ääஉள்ளிட்டபல விடயங்கள் ஆராயப்பட்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் தரப்புகள் தங்களின் பொறுப்புகளை ஏற்றுகொண்டனர்.
பாதுகாப்பு தொடர்பில் பொலீஸார் இவ்வருட உற்சவத்தின் இறுதி நாளன்று 800 க்கு மேற்பட்ட பொலீசாரை கடமையில் ஈடுப்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திர அவர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை இரானுவத்தினரும் கடந்த வருடம் போன்று இவ்வருடமும் ஆலய சுற்றாடலை துப்பரவு செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் மீளாய்வு கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சீர்ணிவாசன்ää கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தனää; கிளிநொச்சி பிராந்திய பொலீஸ் அத்தியட்சர் எடமன்மகேந்திரää உதவிபொலீஸ் அத்தியட்சர் சேனாதிபதி சில்வாää கிளிநொச்சி பொலீஸ் பொறுப்பதிகாரி வீரசிங்கääஇலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர்ääகிளிநொச்சி நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் விகிர்தன்ääகண்டாளை பொறுப்பு மருத்து அதிகாரிääசுகாதார பரிசோதகர்கள்ääநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிääஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர்ääகண்டாவளை கோட்டகல்வி அதிகாரிääகிராம அலுவலர்கள்ääபரந்தன் மக்கள் வங்கி முகாமையாளர்ää ஆலய பரிபாலனசபை தலைவர் வைரமுத்துääஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள்ää ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கண்டாவளை அமைப்பாளர் செல்வம்ää பிரதேச மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
0 Response to "கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்."
Post a Comment