1983 இலிருந்து இறுதி யுத்தம் வரை பாதிக்கப்பட்டு அழிவுகளை சந்தித்த மக்களுக்கு உரிய நட்டஈடுகளை வழங்கவும்ää நட்ட ஈட்டுக்காக விண்ணப்பித்து நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் மக்களுக்கு அதனை விரைவாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்ää பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (25.02.2014) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
1983 ஆம் ஆண்டு தொடக்கம் இறுதி யுத்தம் வரை பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக உள்ளனர். அதிலும் வடக்கு மாகாணம் யுத்தத்தினால் அதிக பாதிப்பைக் கொண்ட மாகாணமாகவுள்ளது. இந்த மக்களுக்கான உதவிகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. எனவேää யுத்தத்தினால் இழப்புகளை சந்தித்த மக்கள் நஸ்ட ஈட்டுக்காக விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கான நஸ்டஈடுகளை விரைவாக வழங்குவதற்கு புனர்வாழ்வு அமைச்சும்ää அதன் அதிகாரிகளும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
“புனர்வாழ்வு அதிகார சபை 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை யுத்தத்தாலும்ää கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட ஈடுகளை வழங்கி வருகிறது. தற்போது இந்த நாட்டிலே யுத்தம் முடிந்து நாடு இயல்பு நிலைமைக்கு திரும்பிய பின்னர் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு என்ற ஒரு அமைச்சை உருவாக்கி அதற்கூடாக பெருந்தொiயான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்து மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் மட்டும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த அல்லது சொத்துக்களை இழந்த 600 பேருக்கு நஸ்ட ஈடுகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்ää அதன் ஒரு கட்டமாக இன்று 265 பயனாளிகளுக்கு கிட்டத்தட்ட 200 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்கப்படுகிறது. முல்லைத்தீவிலும் 200 பயனாளிகளுக்கு 250 இலட்சம் ரூபர் நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் வீடுகள் சேதமடைந்த 1300 விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைவிட மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் 1000 விண்ணப்பங்கள் மேலும் புனர்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஸ்டஈடு என்பது விரைவாக கிடைக்கக்கூடிய ஒரு சூழல் தற்போது தோன்றியிருக்கிறது. இந்த மாவட்டம் அல்லது மாகாணம் யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தென்மராட்சிää வடமராட்சி கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கு போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொண்ட மக்கள். இவர்களுக்கான நஸ்டஈடு வழங்க வேண்டும் என்பது அவசியமானதாகும். இதேபோல் வன்னி மாவட்டங்களும் யுத்தத்தினால் அழிந்துபோன மாவட்டங்களாக உள்ளன. இந்த மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அனைத்து நஸ்டஈடுகளை கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. இந்த நஸ்டஈடு அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்யும் அரசின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
கிட்டத்தட்ட 12ää000 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலனவர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபை இலகு கடன் அடிப்படையில் வாழ்வாதார உதவிகளை வழங்கியிருக்கிறது. இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக அரசாங்கம் பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இவர்களின் எதிர்காலத்திற்காக இந்த நாட்டுக்கு வெளியில் இருந்து எந்தவொரு உதவிகளும் பெறப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள்கூட இந்த முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்காக ஒருசதமேனும் செலவழிக்கவில்லை.எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
முன்னாள் போராளிகளின் அவலங்களை வைத்து அரசியல் நடத்துவதைவிட அவர்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும். அரசியல்வாதிகளாக இருந்தால் என்னää ஊடகங்களாக இருந்தால் என்ன அவர்களின் எதிர்காலம் பற்றித்தான் எமக்கு தெரிந்திருக்க வேண்டுமே தவிர அவர்களின் அவலத்தை கண்ணீரை வைத்து அரசியல் நடத்துவது அல்ல. அவர்களும் இந்த சமூகத்துடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் நினைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நஸ்டஈடுகளை வழங்குவதற்கு உதவியாக இருந்த அமைச்சருக்கும்ää பிரதி அமைச்சருக்கும்ää அமைச்சின் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் எமது சமூகம் சார்பில் நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். எனவும் தெரிவித்தார்
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்ää புனர்வாழ்வளிப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் சந்திரசிறி முத்துகுமாரணää புனர்வாழ்வளிப்பு அதிகார சபையின் தலைவர் சமரசிங்கபுனர்வாழ்வளிப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் விதாணகேää புனர்வாழ்வளிப்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார்ää அமைச்சின் ஏனைய உத்தியோகத்தர்கள்ää மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்ää பிரதேச செயலர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» யுத்தத்தின் பாதிப்புக்களை சுமந்த அனைத்து மக்களுக்கும் நட்டஈடுகள் வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
யுத்தத்தின் பாதிப்புக்களை சுமந்த அனைத்து மக்களுக்கும் நட்டஈடுகள் வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
Posted by kesa
on Tuesday, February 25, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யுத்தத்தின் பாதிப்புக்களை சுமந்த அனைத்து மக்களுக்கும் நட்டஈடுகள் வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்."
Post a Comment