Latest Updates

Categories Post

கனடாவில் கவனத்தை திசைதிருப்பிய வண்ணம் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை மேலும் அதிகரிப்பு.

வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசி, எம்பி3 பிளேயர் அல்லது வேறு மின்னணு சாதனங்களை பயன்படுத்தி கவனத்தை திசைதிருப்பி வாகனமோட்டுபவர்களின் அபராத தொகையை ஒன்ராறியோ மேலும் அதிகரித்துள்ளது.

தண்டக் கட்டணம் உட்பட 155 டொலர்களாக இருக்கும் தற்போதைய தொகை வரும் மார்ச் மாதம் 18-ந் திகதியிலிருந்து 280 டொலர்களாக அதிகரிக்கப்படும்.

ஒன்ராறியோவின் தலைமை நீதிபதி ஆன்மேரி பொங்காலோ கடந்த வாரம் இப்புதிய கட்டணத்தொகைக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.

முன்னிலை படுத்தக்கோரும் கட்டளை ஆணையுடன் அல்லது ரிக்கற்றுடன் நீதிமன்றம் செல்லும் சாரதிகள் குற்றவாளி என தீர்மானிக்கப் படும் பட்சத்தில் அவர்கள் 500 டொலர்கள் வரையிலான அபராத தொகையை எதிர் நோக்க நேரிடும்.

2009- ஒக்டோபர் மாதம் கையடக்க கருவிகள் சட்டமூலம் தடை செய்யப்பட்ட பின்னர் அபராத தொகை அதிகரிக்கப் படுவது இதுவே முதல் தடவை என கூறப்பட்டுள்ளது.

புள்ளிகள் குறைக்கப் படமாட்டாது. பொலிசார் கையடக்க சாதனங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள்.

சட்டம் கல்வி முயற்சிகள் இருந்த போதிலும் கவனத்தை திசைதிருப்பிய வண்ணம் வாகனமோட்டுதல் ஒரு வளர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளதென போக்குவரத்து அமைச்சர் கிளென் முரெயின் காரியாலயத்தில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறுஞ்செய்தி அனுப்பியபடி வாகனம் செலுத்துபவர்களை அதைரியப்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே திசைதிருப்பிய வாகனமோட்டுதலுக்கான அபராத தொகையை அதிகரிக்க சட்டம் முன்மொழியப் பட்டதாக மேற்படி கூற்று தெரிவித்துள்ளது.

அபராத அதிகரிப்பு கவனத்தை திசைதிருப்பி வாகனமோட்டுபவர்களை “மேலும் அதைரியப்படுத்தும்”. என நம்புவதாக முரெயின் காரியாலயம் தெரிவித்துள்ளது.

ரொறொன்ரோ பொலிஸ் போக்குவரத்து சேவைகள் ஆபிசர் கான்ஸ்டபிள் கிளின்ர் ஸ்ரிப்பி கவனத்தை திசைதிருப்பியபடி வாகனமோட்டிய சம்பவத்தால் பாதிக்கப் பட்ட ஒருவராவர்.

Bluetooth உடன் கூடிய கைத்தொலைபேசி போன்ற ஹான்ட்ஸ்-விறி சாதனங்கள் அனுமதிக்கப்படும்.

கைமுறையாக நிரலாக்கப்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், வாகனம் செலுத்துதல் சம்பந்தமற்ற காட்சிதிரைகளை பார்வையிடல் மடிக்கணணிகள் அல்லது டிவிடி பிளேயர்கள் உட்பட தடைசெய்யப் பட்டுள்ளது.

0 Response to "கனடாவில் கவனத்தை திசைதிருப்பிய வண்ணம் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை மேலும் அதிகரிப்பு."

Post a Comment