Latest Updates

Categories Post

பாரம்பரிய கைத்தொழில்கள் கலைஞர்களது நலன்கள் பேணப்படும் - அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா


எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் பாரம்பரிய கைவினைக் கைப்பணியாளர்களை

கௌரவிக்கும் முகமாகää இன்றைய தினம் இந்த விருது வழங்கும் வைபவத்தை பாரம்பரிய

கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும்ää தேசிய

அருங்;கலைகள் பேரவையும் இணைந்து நடாத்துவதும்ää இந்த வைபவத்தில் எமது ஜனாதிபதி அவர்கள்

கலந்து கொண்டு சிறப்பிப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது என

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (25) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

நடைபெற்ற தேசிய அருங்கலைகள் விருது விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும்

போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்ää கிராமிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதன் மூலம்.

எமது நாட்டின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பினை வழங்கும் மஹிந்த சிந்தனை தூர

நோக்கின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் அடிப்படையில் கிராமிய கைவினைக்

கைப்பணித்துறையை ஊக்குவிப்பதற்கும்ää வளர்த்தெடுப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்கும்ää

அதனூடாக கைவினைக் கைப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் எனது அமைச்சு

பல்வேறு திட்டங்களை வகுத்துää நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் இன்றைய நிகழ்வானது எமது கைவினைக் கைப்பணியாளர்களை ஊக்குவிக்கும் அதே

நேரம். அவர்களின் திறமைகளை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாகும்.

கடந்தகால அழிவு யுத்தம் காரணமாக வடக்குää கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில்

ஏற்பட்டிருந்த பல்வேறு பாதிப்புக்கள் காரணமாக எமது கைவினைக் கைப்பணித்துறையும்

பாதிப்புகளுக்கும்ää இடையூறுகளுக்கும் முகம்கொடுத்திருந்தது. ஆனால். இன்று அந்த

நிலை இல்லை. இவ்வாறானதொரு நிலையில் கைவினைக் கைப்பணியாளர்களின் உற்பத்தித்துறை

மற்றும் சந்தைப்படுத்தல் துறைசார்ந்த பல்வேறு வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக்

கொடுப்பதே எனது அமைச்சின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

அந்த வகையில் கடந்தகால அழிவு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துää இந்த நாட்டு மக்களுக்கு

நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொடுத்துள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு எனது நன்றியைத் மீண்டும்ää மீண்டும் தெரிவித்துக்

கொள்கின்றேன்.

இன்றைய தினம் 334 கைவினைக் கைப்பணித்துறை சார்ந்த கலைஞர்கள் விருது

பெறுகின்றீர்கள். உங்களது உணர்வுகளைää எண்ணங்களை கலைத்துவமாக உங்களது ஆக்கங்களில்

வெளிக்காட்டியதால் இந்த கௌரவம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

தேசிய ரீதியில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் எமது கைவினைக்

கைப்பணியாளர்களின் திறமைகளை வெளிக்காட்ட எனது அமைச்சு வாய்ப்புக்களை ஏற்படுத்த

உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதேபோன்று உல்லாசப் பயணத்துறை ஊடாகவும்ää மேலும் பல வழிகளிலும் எமது கைவினைக்

கைப்பணித்துறையை மேம்படுத்திவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில்

ராஜபக்ஷ அவர்களுக்கும் கைவினைக் கைப்பணித்துறை கலைஞர்கள் சார்பில் எனது நன்றியைத்

தெரிவித்துக்கொள்கின்றேன்.





0 Response to "பாரம்பரிய கைத்தொழில்கள் கலைஞர்களது நலன்கள் பேணப்படும் - அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா "

Post a Comment