2014 ஆம் ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என்ற திருவிழாவிற்கான அழைப்பிதழ் நேற்று இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் இருந்து ராமேஸ்வரம் வேர்க் கோடு ஆலய பங்கு தந்தை சகாயராஜுக்கு பக்ஸ் மூலம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 15, 16 திகதிகளில் நடைபெற உள்ளது எனவும் எனவே விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்து சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Response to "கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா திகதி அறிவிப்பு!"
Post a Comment