Latest Updates

Categories Post

யாழில் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் காவலில்............

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வெடி மருந்துகள் 72 கிலோவுடன் கைது செய்யப்பட்டவர்கள்
நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தொடர்ந்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரனைகள் செய்யப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரதம பொலிஸ் பரிசோதகர் சி . ஆர் றொகான் பீரிஸ் தொவித்துள்ளார் .

யாழ்ப்பாணம் ஊடகவியலாளாகளுக்கு வாராந்தம் நடைபெறும் பொலிஸ் உடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது .

கடந்த 19 ம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ரிஎன்ரி வெடி மருந்து 56 கிலோவும் சி 4 வெடி மருந்து 16 கிலோவும் கைப்பற்றப்பட்டதாகவும் தொவித்ததுடன்

குறிப்பிட்ட சந்தேக நபர்களிடம் இருந்து மேலதிக தகவல்களை பெறும் வகையில் விசாரனைகள் நடை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார் .

0 Response to "யாழில் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் காவலில்............ "

Post a Comment