Latest Updates

Categories Post

அத்துமீறிய மீன்பிடிப் போரைத் தடுத்து நிறுத்துமாறு மாதகல், சேந்தாங்குளம் மீனவர்கள் கோரிக்கை.



மாதகல் , சேந்தாங்குளம் பகுதியிலுள்ள கடலில் அத்துமீறி மீன்பிடிக்கின்ற இந்திய , தென்னிலங்கை
மீனவர்களால் தமது சொத்துக்கள் சேதமாக்கப்படுவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மாதகல் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

நீண்டகாலமாக தமது சொத்துக்கள் கடலில் சூறையாடப்படுவதாகவும் நாசமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள இவர்கள் இந்திய ரோலர் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வள்ளங்கள் மாதகல் , சேந்தாங்குளம் பகுதியினுள் கரைக்கு மிக அண்மையாக இந் நாசகார வேலைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர் .

இதனால் தாம் பல்லாயிரக்கணக்கான தமது வலைகளை பயன்படுத்த முடியா மல் கடலுடனையே விடவேண்டிய சூழ்நி லை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய மீன வர் இந் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளுமாறு அண்மையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் இம் மீனவர்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர் .

0 Response to "அத்துமீறிய மீன்பிடிப் போரைத் தடுத்து நிறுத்துமாறு மாதகல், சேந்தாங்குளம் மீனவர்கள் கோரிக்கை."

Post a Comment