Latest Updates

Categories Post

3 குழந்தைகள் பெற்ற சீன இயக்குநருக்கு 16 கோடி ரூபா அபராதம்!


இயக்குநர் ஸாங் யிமோவும் அவரின் மனைவி சென் டிங்கும் சீனாவின் குடும்ப கட்டுப்பாட்டு விதிகளை மீறி மூன்றாவது குழந்தை பெற்றமைக்காக குற்றம் சுமத்தப்பட்டதுடன் அந்நாட்டு அரசாங்கம் 7.5 மில்லியன் யுவான் (சுமார் 16 கோடி ரூபா) அபராதம் விதித்துள்ளது.

62 வயதான ஸாங் யிமோவ் தனக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளதாக கடந்த டிசெம்பர் மாதம் ஒப்புக்கொண்டிருந்ததனால் இத்தம்பதிக்கு அபராதம் விதிப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்ததுடன் இத்தம்பதியின் வருமானத்தையும் சமூக செலவுகளையும் கருத்திற்கொண்டு அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸாங் யிமோவ் தம்பதியின் வருமானத்தை மதிப்பீடு செய்வதற்காக 9 விசாரணைக் குழுக்கள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டிருந்ததுடன் அக்குழுவினர் மதிப்பிட்ட வருமானத் தொகையை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றில் இத்தம்பதியினர் கையெழுத்திட்டனர்.

இதனை தொடர்ந்து ஜனவரி 9 ஆம் திகதியிலிருந்து 90 நாட்களுக்கு அபராதத் தொகையை செலுத்துமாறும் அல்லது மேன்முறையீடு செய்யுமாறு கோரப்பட்டிருந்ததையடுத்து சில தினங்களுக்குமுன் 7.48 மில்லியன் யுவான் அபராதத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர்.

0 Response to "3 குழந்தைகள் பெற்ற சீன இயக்குநருக்கு 16 கோடி ரூபா அபராதம்!"

Post a Comment