 யாழ் மாவட்ட மக்களுக்கு குடி நீர் வழங்கக் கூடாது என எச்சந்தர்ப்பத்திலும்
யாழ் மாவட்ட மக்களுக்கு குடி நீர் வழங்கக் கூடாது என எச்சந்தர்ப்பத்திலும்யாரும் கூறவில்லை . ஆனால் இரனைமடுக்குளத்தில் இருந்து எமது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் படியே நாம் வேண்டுகின்றோம் .
மேற்க்கண்டவாறு யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று மதியம் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளான தலைவர் செல்லையா சிவப்பிரகாசம் செயலாளர் முத்து சிவமோகன் பொருளாளர் சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை ஆகியோர் தெரிவித்துள்ளார்கள் .
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இரனைமடுக்குளம் நீர் விநியோகத் திட்டம் சம்பந்தமாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இது வரைக்கும் விவசாயிகளுக்கு தெளிவு படுத்தப்படவும் இல்லை பிரதிகள் வழங்கப்படவும் இல்லை . நாம் இந்த திட்டத்தையிட்டு சந்தேகப்படுகின்றோம் .
யாழ்ப்பாணத்திற்கான குடி நீர்த்திட்டம் என குறிப்பிடும் படி நாம் கூறுகின்றோம் ஆனால் அதனை உரிய அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் வேண்டுமாக இருந்தால் தமிழில் குறிப்பிடுவதாக கூறுகின்றார்கள் .
நீர்ப்பாசனத் தினைக்களத்தைப் பொறுத்த வரையில் இந்து இரனைமடுக்களத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு முழுமையாகத் தெரியும் .
ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாது நடவடிக்கைகளையிட்டு பிழையான தகவல்களை கூறி வருகின்றார்கள் .
இரனைமடுத்திட்டத்தை சமர்ப்பித்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு எல்லாக்காலமும் நீர் வழங்குவதாக திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்கள் என்பதையும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்கள் என்பதையும் நாம் தற்போது அறியக் கூடியதாகவுள்ளது . சிறு போக செய்கையை நிறுத்தி இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகின்றார்கள் .
இதற்கு நாம் எச்சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப் போவதில்லை . எமது தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும் அதனையிட்டு யாரும் உத்தரவாதம் தர தயாராக இல்லை .
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டத்தில் 13 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் ஒன்பது விடயங்கள் திருத்தப்பட வேண்டும் . நாம் உரிய அதிகாரிகளுடன் கதைக்கும் போது அதனை ஏற்றுக் கொள்வது போல் காட்டிக்கொண்டாலும் அதனை திருத்த அவர்கள் தயாராக இல்லை .
இத்தகைய நிலையிலேயே நாம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்பு கொண்டோம் . அதன் அடிப்படையில் தான் தற்போது விவசாய அமைப்புக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனக் கூறி திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .
நாம் கூறுகின்றோம் இரனைமடுக்குளத்தின் உள்புறத்தில் இருந்து நீரை துளையிட்டு எடுக்க அனுமதிக்க முடியாது வெளியில் இருந்து எடுங்கள் என்று அதற்கு அவர்கள் சம்மதம் இல்லாத நிலமையே காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்கள் .
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
0 Response to "இரணைமடுக் குளத்திலிருந்து கிளிநொச்சி மக்களின் தேவையை பூர்த்தி செய்த பின்னர் யாழ் மக்களுக்கு வழங்குங்கள். விவசாய சம்மேளனப் தலைவர்."
Post a Comment