கிளிநொச்சி கரைச்சி பொதுச்சந்தையில் பூனை ஆறு பொதுமக்களை கடித்துள்ளது என
சந்தை வர்த்தகர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த ஒரு சில தினங்களில் மட்டும் சந்தையில் உள்ள பூனை ஒன்று பொருட்களை கொள்வனவு செய்ய வருகின்ற பொது மக்களை தீடிரென பாய்ந்து கடித்து காயத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றுவிடுகின்றது அந்த வகையில் ஒரு சில தினங்களில் மட்டும் குறித்த பூனை ஆறு பொதுமக்களை கடித்துள்ளது.
இதில் சிலர் இரத்தம் சிந்துமளவுக்கு காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிசை பெற்று சென்றுள்ளனர். குறித்த பூனையை பிடிப்பதற்கோ அல்லது கொலைசெய்வதற்கோ வர்த்தகர்கள் முயன்ற போது தப்பித்து சென்றுவிடுவதாகவும் சில மணிநேரங்களின் பின்னர் மீண்டும் சந்தைக்குள் உட்பிரவேசித்து திரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் கட்டாகாலி நாய்கள்,பூனைகள் என்பன அதிகமாக காணப்படுவதாகவும் இவைகள் சந்தைக்கு வருகின்ற பொது மக்களுக்கு பல்வேறு வழியில் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே மேலும் பொது மக்களை கடித்து ஆபத்தை ஏற்படுத்த முன்னர் குறித்த பூனை மற்றும் கட்டாகாலி நாய்களை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Categories Post
கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஆறு பேரை பதம் பார்த்த பூனை
Posted by kesa
on Friday, February 21, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஆறு பேரை பதம் பார்த்த பூனை"
Post a Comment