Latest Updates

Categories Post

முகநூலில் பயனாளர் கணக்கு தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை !



டமாஸ்கஸ்: சிரியாவில் முகநூல்(Facebook) சமூக இணையதளத்தில் பயனாளர் கணக்கு தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் பேஸ்புக்கில் தகவல்களை பரிமாறிவரும் நிலையில், சிரியாவில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவின் ராக்கா சிட்டியைச் சேர்ந்த பெண் அல்-ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் இணையதளத்தில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். அது குற்றமாக கூறப்பட்டு அல்-ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்கா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இதற்கு தீர்ப்பளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேஸ்புக் அக்கவுண்ட் முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 Response to "முகநூலில் பயனாளர் கணக்கு தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை !"

Post a Comment