Latest Updates

Categories Post

நூலக உத்தியோகத்தர் மீது கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் தாக்குதல்... தலைவரிடம்



நியாயம் கேட்டதால் பணியிலிருந்தும் நீக்கம்…!

ஆளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர்

ஒருவரால் நூலக உத்தியோகத்தர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை (2014.02.11) அன்று பிற்பகல்

4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த உத்தியோகத்தரான சாவகச்சேரி கச்சாய்

உப்புக்கேணியைச் சேர்ந்த இளையதம்பி சிவானந்தம் கடமையிலிருந்த சமயம் அங்கு போதையில்

வந்ததாகக் கூறப்படும் சாவகச்சேரி நகரசபையின் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உறுப்பினரான ஞானப்பிரகாசம் கிசோர் என்பவரே தாக்குதல் நடாத்தியுள்ளார். சாவகச்சேரி

நகரசபையில் நூலகராகக் கடமையாற்றும் உத்தியோகத்தரிடம் நீ எப்போது பென்சன் எடுக்கப்

போகிறாய்? என கூட்டமைப்பு உறுப்பினர் வினாவியுள்ளார். அதற்கு உத்தியோகத்தர் எனக்கு

பென்சன் எடுப்பதற்கு இன்னும் நான்கு வருடங்கள் உள்ளது எனக் கூறியுள்ளார். அப்போது

ஆளும் கூட்டமைப்பு உறுப்பினரான கிசோர்ää இல்லை நீ ஒழுங்காக வேலை செய்வதில்லை நீ

பென்சன் எடு! என தகராறு செய்துள்ளார். இதன்போது இருவரும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அச்சமயம் கடமையிலிருந்த உத்தியோகத்தரைää ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளார். இதனால் நிலை

தடுமாறி நூலக உத்தியோகத்தர் கீழே விழுந்தார். இது தொடர்பாக குறித்த உத்தியோகத்தர்

ஆளும் கூட்டமைப்பின் நகரசபைத் தலைவர் இறப்பியல் தேவசகாயம்பிள்ளையிடம் முறைப்பாடு

செய்தார். அதற்கு நீதான் உறுப்பினரை அவமதித்துள்ளாய் எனக்கூறி குறித்த உத்தியோகத்தரை

வேலையிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். அத்துடன் நீ பென்சனில் போவதுதான் நல்லது

எனவும் ஆலோசனையும் கூறினாராம். எனது பணியிடத்திற்கு வந்து குறித்த உறுப்பினர்

கிசோர் தாக்கியுள்ளார் என மீண்டும் எடுத்துக் கூறியபோது நீ பென்சனில் போ என

அதட்டியுள்ளாராம்.

சாவகச்சேரி நகரசபை அட்டவணைப்படுத்தப்படாத பதவியணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு

விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அதில் நூலக பரிசாரகர் பதவிக்கும் விண்ணப்பம்

கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 2014.02.28 ஆகும். அதற்கு தங்களது

குடும்ப உறவுகளை வேலையில் இணைத்துக் கொள்வதற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முண்டியடித்துக்

கொண்டு தமது உள்வேலைகளை ஆரம்பித்துää இப்பொழுதே வெற்றிடங்கள் யார் யாருக்கென

பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாம். வெற்றிடங்கள் போதாமையால் இவ்வாறு ஓய்வு நிலைக்கு

3ää4 வருடங்கள் உள்ளவர்கள் கட்டாய ஓய்வுக்குச் செல்லுமாறு வற்புறுத்தப்படுவதாக ஊழியர்கள்

தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டிலுள்ள பல சபைகளில் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அவர்களது கையாட்களும் பல்வேறு

அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வலிகாமம் கிழக்கு பிரதேசசபைச் செயலாளர் 2014

வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது கூட்டமைப்பினர் இரு கோஷ்டிகளாக செயற்பட்டு வரவு

செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. கூட்டத்தை நெறிப்படுத்தியதற்காக இதற்காக அவர் பதவி இறக்கம்

செய்யப்பட்டு அங்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின்

உட்கட்சிப் கோஷ்டிப் பூசல்களால் நேர்மையான அதிகாரிகள் ஆதிக்கம் உள்ள கோஷ்டிகளால்

பந்தாடப்படுகின்றனர்.

0 Response to "நூலக உத்தியோகத்தர் மீது கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் தாக்குதல்... தலைவரிடம்"

Post a Comment