Latest Updates

Categories Post

யுத்த இழப்­பீ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை புதுக்­கு­டி­யி­ருப்பு வர்த்­த­கர்கள் கவலை.


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் மீள்குடியேறியதையடுத்து
தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாகியும் தமக்கு யுத்த நஸ்ட ஈட்டுக்கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கவலைதெரிவித்துள்ளனர் .

புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வர்த்தக சங்கக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தனர் . நஸ்டஈடுகள் வழங்கப்படாமையினால் வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது நிலை காணப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர் .

இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொறுப்பற்ற தன்மை தொடர்பாகவும் புதுக்­கு­டி­யி­ருப்­புச்­சந்­தையின் நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது .

இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வணிக கைத்தொழில் வேளாண்மை ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி பே . விக்கினேசன் மாகாண சபை உறுப்பினர்களான வி . கனகசுந்தரசுவாமி , திருமதி . மேரிகமலா ஆகியோரும் கலந்துகொண்டிடனர் .

0 Response to "யுத்த இழப்­பீ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை புதுக்­கு­டி­யி­ருப்பு வர்த்­த­கர்கள் கவலை."

Post a Comment